Google News
தமிழகம் முழுவதும் விஷ சாராயத்துக்கு எதிராக பாஜக போராட்டம் தொடங்கியது.
நச்சு மதுவை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பாஜக மகளிர் அணி சார்பில் நமீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம், ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல் நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Discussion about this post