Google News
புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என, தி.மு.க., அறிவித்துள்ள நிலையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தி.மு.க.,வுக்கு முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார்.
2020 டிசம்பரில் சென்ட்ரல் விஸ்டா என பெயரிடப்பட்டுள்ள புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.இந்த புதிய பார்லிமென்ட் கட்ட பணிகள் தற்போது முடிவடைந்துள்ளதால், திறப்பு விழா வரும் 28ம் தேதி நடைபெறும் என்றும், பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைக்கிறார்.
புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டின் ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இதனிடையே இந்த விழாவில் அதிமுக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளன. ஜனநாயகத்தின் இதயமான நாடாளுமன்ற திறப்பு விழாவில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று பாஜக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் திமுக பங்கேற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நாடாளுமன்ற கட்டிடத்தை மத்திய அரசு திறந்து வைத்துள்ளது ஆட்சியாளர்களின் தொலைநோக்கு பார்வைக்கு எடுத்துக்காட்டு. பிரதமரின் இது ஜனநாயகமானது, நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது அல்ல.
புதிய பாராளுமன்ற கட்டிடம் நவீன தொலைத்தொடர்பு வசதிகளுடன் 100 ஆண்டுகளுக்கு மேல் தடையின்றி செயல்படும். தமிழகத்தில் இருந்து 75 ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்த செங்கோலையே இவர்கள் வைத்திருக்கப் போவதுதான் இதில் முக்கிய அம்சம். இந்தச் செங்கோல் அரசாங்கம் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதையும், நீதி தவறாமல் இருக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது.
செங்கோல் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாகும். இது தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது. எனவே, தமிழகத்தின் ஆளும் கட்சியான தி.மு.க., கூட்டணி கட்சிகள் மற்றும் அக்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து, வரலாற்று சிறப்பு மிக்க புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழாவை பெருமைப்படுத்த வேண்டும்.
Discussion about this post