Google News
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக் கோப்பை போட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 13வது கிரிக்கெட் உலகக் கோப்பை (50 ஓவர்) இந்தியா முழுவதும் 10 நகரங்களில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் ஐசிசி கோப்பையை வெல்லாத இந்திய அணி, இம்முறை சொந்த மண்ணில் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. உலக கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், உலக கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதனை முன்னிட்டு உலகக் கோப்பை போட்டி உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக எடுத்துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக் கோப்பை போட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதல் ஆட்டம் அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
Discussion about this post