Google News
உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
50 ஓவர் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இது அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறும். இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் ஐசிசி கோப்பையை வெல்லாத இந்திய அணி, இம்முறை சொந்த மண்ணில் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. உலக கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், உலக கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை கடந்த மாத இறுதியில் தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்தது. உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
அரையிறுதிப் போட்டிகள் மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் மற்றும் இறுதிப் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறும். டிக்கெட்டுகளை ஆன்லைனில் https://tickets.cricketworldcup.com இல் பதிவு செய்யலாம்.
Discussion about this post