Google News
ஞாயிற்றுக்கிழமை நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் 2 டையில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது.
முன்னதாக போட்டியின் இரண்டு ஒற்றையர் ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. முதலில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் – மொராக்கோவின் யாசின் லிம்மியுடன் நடந்த மோதலில் காயம் காரணமாக விலகியதால் யாசின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். 2வது ஒற்றையர் ஆட்டத்தில் சுமித் நாகல் ஆடம் மவுண்டரை தோற்கடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் இரட்டையர் ஆட்டத்தில் ரோகன் போபண்ணா/யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எலியட் பென்ஷெட்ரிட்/யுன்ஸ் லாலமி ஜோடியை வீழ்த்தி இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.
அடுத்த ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் 6-3, 6-3 என யாசின் லிம்மியை வீழ்த்தி இந்தியா 3-1 என முன்னேறியது. கடைசி ஒற்றையர் ஆட்டத்தில் திக்விஜய் பிரதாப் சிங் 6-1, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் வலித் அஹுதாவை வீழ்த்தினார். இறுதியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, உலக குரூப் 1 பிளே-ஆஃப் சுற்றில் விளையாடவுள்ளது.
போபண்ணா விடைபெறுகிறார்: இந்த டையுடன் டேவிஸ் கோப்பை டென்னிஸிலிருந்து ரோகன் போபண்ணா விடைபெற்றார். 21 ஆண்டுகளில் அவர் போட்டியில் விளையாடிய 33வது டை இதுவாகும். வெற்றிக்குப் பிறகு கையில் தேசியக் கொடியுடன் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொண்டார்.
Discussion about this post