Google News
42 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது
16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடந்து வருகிறது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
சூப்பர்4 சுற்றின் 5வது லீக்கில் இறுதிப்போட்டியை தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தியாவுக்கு எதிராக தோல்வியடைந்து வங்கதேசத்தை வீழ்த்தி இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. எனவே வெற்றி பெறும் அணி எந்த பிரச்சனையும் இன்றி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
மழை காரணமாக ஆட்டம் 2 மணி நேரம் தாமதமானது. இதையடுத்து மழை காரணமாக 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு 45 ஓவர்களாக ஆட்டம் தொடங்கியது. பின்னர் பாதி நேரத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது.
தொடக்கத்தில் பகர் ஜமான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பாபர் அசாம் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் அப்துல்லா ஷபீக்கும், முகமது ரிஸ்வானும் இணைந்து சிறப்பாக விளையாடினர். அப்துல்லா ஷபிக் தொடர்ந்து ஸ்விங்கிங் ரன்களுடன் அரைசதம் அடித்தார். பின்னர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். முகமது ரிஸ்வான் மற்றும் இப்திகார் அகமது இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முகமது ரிஸ்வான் அரைசதம் அடித்தார்.
42 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. மொஹமட் ரிஸ்வான் 86 ஓட்டங்களையும், இப்திகார் அகமது 47 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி தரப்பில் மதீஷ பத்திரன 3 விக்கெட்டுகளையும், பிரமோத் மதுஷன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Discussion about this post