Google News
சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் உள்ளாடைக்குள் தங்கம் கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் வருகின்றன. இந்த விமானங்களில் பயணிப்பவர்களில் சிலர் தங்கத்தை பல்வேறு வழிகளில் கடத்தி வருவதை சுங்கத்துறை அதிகாரிகள் சாமர்த்தியமாக கண்டுபிடித்து பறிமுதல் செய்வது வழக்கம்.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை ஏர் இன்டெலிஜென்ஸ் விங் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
சந்தேகத்தின் பேரில் ஒருவரை தனித்தனியாக பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது உள்ளாடையில் பசை வடிவில் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள், ரூ.500 மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து 15,32,692 பணம் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post