Google News
விஎச்பி முன்னாள் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியனை வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும், பேச்சாளருமான ஆர்.பி.வி.எஸ். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கர் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினர் குறித்து மணியன் அவதூறாக பேசியதாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட முன்னாள் தலைவர் ஐ.செல்வம் புகார் அளித்தார்.
இந்த புகார் மீது போலீஸ் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது செய்யப்பட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், தவறான புரிதல் காரணமாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வயது முதிர்வு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்றும் மணியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை பரிசீலிப்பதாக நீதிபதி அல்லி அறிவித்து, மணியனை வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Discussion about this post