Google News
மேஷம்
மேஷம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரில் புதிய அனுபவம் உண்டாகும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். திருமண முயற்சிகள் பலனளிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் நிர்வாகத் திறமை வேலையில் வெளிப்படும். லாப நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உங்கள் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகள் உங்களுக்கு நம்பிக்கை தருவார்கள். உங்களால் ஆதாயம் அடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதனை நாள்.
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களின் உதவியை எதிர்பார்க்கலாம். தொழிலில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி தரும் நாள்.
கடகம்
கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை முயற்சி செய்து முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் பணிவாகப் பேசி கட்டணம் வசூலிக்க முயற்சிக்கவும். வேலையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.
சிம்மம்
சிம்மம்: கடினமான காரியங்களை எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணத்தில் மகிழ்ச்சி தங்கும்; வியாபாரத்தில் கடன் வரவு கணிசமாக உயரும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.
கன்னி
கன்னி: கனிவாகப் பேசி காரியத்தை சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் உத்தியோகஸ்தர்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். திடீர் யோகம் உண்டாகும் நாள்.
துலாம்
துலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சிப்பீர்கள். அண்டை வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் பழைய ஊழியர்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். எதிலும் தெளிவு பிறக்கும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: சில எதிர்பார்ப்புகள் தள்ளிப் போனாலும் எதிர்பாராத வேலை முடியும். சகோதரி உதவுவார். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரலாம். புதிய பணி தொடரும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். நன்மை தரும் நாள்.
தனுசு
தனுசு: தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கப்படும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு அதிகரிக்கும். தைரியம் தரும் நாள்.
மகரம்
மகரம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். தோற்றம் பளபளப்பாக இருக்கலாம். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதிய நட்பு மலர்கிறது. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலனளிக்கும். உத்தியோகத்தில் மரியாதை கூடும். மகிழ்ச்சியான நாள்.
கும்பம்
கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் யாரும் உங்களைப் புரிந்து கொள்ளாதது போல் உணர்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். நெகிழ்வாக இருக்க வேண்டிய நாள்.
மீனம்
மீனம்: விடாமுயற்சியுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். குழந்தைகளால் டென்ஷன் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சண்டை போட்டு லாபம் அடைவீர்கள். அலுவலகத்தில் மறைமுகத் தொல்லைகள் வந்து நீங்கும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.
Discussion about this post