Google News
2022-ல் ராசியை 2 முறை மாற்றும் சனி பகவானால் பணம் மூட்டை மூட்டையாக 4 ராசிக்காரர்களுக்கு மின்னல் வேகத்தில் சேர வாய்ப்பு இருப்பதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சனி ஒரு ஆண்டில் இரண்டு முறை ராசியை மாற்றுவதால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் அவற்றில் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை எதிர்பாராத வகையில் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது என்று ஜோதிடர்கள் கருதுகிறார்கள்.
மேஷம்
இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைக் காண்பார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறுவார்கள். நல்ல மரியாதை கிடைக்கும்.
ரிஷபம்
ஏப்ரல் 29-ந் தேதிக்கு பிறகு ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். சனி பகவானால் நிறைய பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாகவும், சாதகமாகவும் இருக்கும்.
தனுசு
2022-ல் சனி பகவானால் தனுசு ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். நிதி நிலைமை நன்கு வலுவாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு, இந்த காலம் மிகவும் பயனுள்ளதாகவும், சாதகமானதாகவும் இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரம் இக்காலத்தில் நன்றாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றையும் பெறும் வாய்ப்பு நிறைய உள்ளது. பல பெரிய புதிய ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புள்ளது.
Discussion about this post