Google News
உலகில் கோடான கோடி நபர்கள் வாழ்கிறார்கள். பல கோடி நபர்களுக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோஷ பாதிப்பு உள்ளது. இந்த தோஷம் ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
உலகில் கோடான கோடி நபர்கள் வாழ்கிறார்கள். பல கோடி நபர்களுக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோஷ பாதிப்பு உள்ளது. இதில் பலர் சர்பத்தை நேரில் கூட பார்த்து இருக்க மாட்டார்கள். பின் எவ்வாறு சர்ப்ப தோஷம் ஏற்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும். இவைகள் கர்ம வினை ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால், கீழ் வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
காரணமே இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது. நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பிரிப்பது, ஒரு குடும்பத்தை கெடுப்பது, உழைத்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது அடுத்தவர் சொத்தை அபகரிப்பது, திருடுவது, கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தவறுவது, தவறான வைத்தியம் செய்வது, பொய்யான வதந்தியை பரப்புவது, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது கோவில் சொத்தை அபகரிப்பது பசுக்களை, விலங்குகளை வதைப்பது இயற்கையை மாசுபடுத்துவது நோயை பரப்புவது, வீண் வதந்தியை கிளப்புவது போன்ற காரணங்களால் தான் சர்ப்ப, கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
Discussion about this post